Phone: +91 462 – 2353067 | Email : admin@annaihajiracollege.com

தமிழ்த்துறைத் தலைவரின் பதிவு
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முப்பால் கண்டது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் கொண்டது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழ்மொழி என்பது வெறும் கல்வி அல்ல அது கலாச்சாரத்தை புரட்டிப்போடும் வல்லமை வாய்ந்தது. எனவே தமிழ் மொழிக் கல்வியை ஆழ்ந்து படிக்கும் போது அது அறத்தையும், மறத்தையும் மாணவிகளுக்கு போதிக்கும் வாழ்வியலைக் கற்றுத்தரும். அத்தகைய மொழிக்கல்வியை மாணவிகளுக்கு போதிக்கும் தமிழ்த்துறை பெருமிதம் கொள்கிறது. இக்கல்லூரி மாணவியர் அனைவரும் மொழிப்பாடத்தில் தமிழை பயில்வது கூடுதல் சிறப்பு.