2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் தமிழ்த்துறை பொதுத்தமிழ் பிரிவில் இயங்கி வருகிறது. கல்வி என்பது புத்தகத்தோடு முடிவடைவது இல்லை. அவற்றோடு தொடங்குகிறது. அவ்வாறு எம்மாணவிகள் தமிழ்த்துறையில் தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழக தரங்களைப் பெற்றுள்ளனர். முத்தாய்ப்பாக பொதுத்தமிழ் பிரிவில் ( 2007 – 2010 ) கல்வி ஆண்டிலும் (2015 – 2018) கல்வி ஆண்டிலும் இரு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இதுவரை 85 தரங்களைப் பொதுத்தமிழ் பாடப்பிரிவில் பெற்றுள்ளனர். பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். கட்டுரைப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளனர். இத்துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட உதவிப்பேராசிரியர்களுக்கான தகுதி பெற்றிருப்பவர்கள்.